கவியரசர் 'அனுபவ' த்தைப் பற்றி எழுதிய அற்புதமான பாடல்.
கவியரசர் 'அனுபவ' த்தைப் பற்றி எழுதிய அற்புதமான பாடல். magnify
வலைப்பூ நண்பர்கள் அனைவரும் படித்து மகிழ - படித்துப் பயன் பெறக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 'அனுபவ' த்தைப் பற்றி எழுதிய அற்புதமான பாடல் .
கவியரசர் அவர்கள் இந்தப் பாடலைப் பதிவு செய்த
தேதி 16.04.1964
"பிறப்பின் வருவது யா'தெனக் கேட்டேன்
பிறந்து பாரெ'ன இறைவன் பணித்தான்
படிபெனச் சொல்வது யா'தெனக் கேட்டேன்
படித்துப் பா'ரென இறைவன் பணித்தான்
அறிவெனச் சொல்வது யா'தெனக் கேட்டேன்
அறிந்து பா'ரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவது என்'னெனக் கேட்டேன்
அளித்துப் பா'ரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யா'தெனக் கேட்டேன்
பகிர்ந்து பா'ரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யா'தெனக் கேட்டேன்
மணந்து பா'ரென இறைவன் பணித்தான்
பிள்ளை என்பது யா'தெனக் கேட்டேன்
பெற்றுப் பா'ரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யா'தெனக் கேட்டேன்
முதிர்ந்து பா'ரென இறைவன் பணித்தான்
வறுமை என்பது என்'னெனக் கேட்டேன்
வாடிப் பா'ரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏ'தெனக் கேட்டேன்
இறந்து பா'ரென இறைவன் பணித்தான்
அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவ னேநீ ஏன்எனக் கேட்டேன்
ஆண்டவன் கொஞ்சம் அருகினில் வந்து
'அனுபவம் என்பதே நான்தான் என்றான்!"
source: பல்சுவை.
0 Comments:
Post a Comment
<< Home